உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இரு சந்தேக நபர்கள் கைது

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இரு சந்தேக நபர்கள் கைது

கிரிபாவ, சங்கப்பாலய வெல்யாய பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் 48 வயதான கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நேற்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த நபர் கைதாகியுள்ளார்.

அதேவேளை எல்பிட்டிய, வல்லம்பகல சந்தியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் 29 வயதான தல்கஸ்பே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அவரிடமிருந்து கத்தி, வாள், 25 கிராம் ஹெரோயின் போன்றவையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இரு சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This