செருப்பால் அடி, உருவ பொம்மைக்கு தீ…சீமானுக்கு எதிராக போராடிய 878 பேர் மீது வழக்குப் பதிவு

செருப்பால் அடி, உருவ பொம்மைக்கு தீ…சீமானுக்கு எதிராக போராடிய 878 பேர் மீது வழக்குப் பதிவு

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரான சீமான், அடிக்கடி ஏதாவதொரு சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வகையில் அண்மையில் தந்தை பெரியார் குறித்து அநாகரிகமாக சில வார்த்தைகளை பேசியிருந்தார்.

எனவே அவரது பேச்சுக்கு இதுவரை எந்தவொரு ஆதாரமும் அளிக்கப்படாததால் சீமானின் வீடு முற்றுகையிடப்படும் என தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள சீமான் வீட்டுக்கு பொலிஸ் காவல் போடப்பட்டது.

இந்நிலையில், ஏற்கனவே கூறியிருந்தபடி, பெரியாரிய உணர்வாளர்கள் சீமானின் வீட்டை முற்றுகையிடும் நோக்கில் பொலிஸாரின் தடுப்புகளை மீறி சீமான் வீட்டுக்குள் செல்ல முயன்றதுடன் சீமானின் உருவப்படத்தை செருப்பால் அடித்தும், உருவ பொம்மைக்கு தீ வைத்தும் தங்கள் கோபத்தை வெளிக்காட்டினர்.

இதனைத் தொடர்ந்து பொலிஸாரின் தடுப்புகளை மீறிச் சென்ற பெரியாரிய உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டதோடு, சீமானுக்கு எதிராக போராட்டம் செய்த சுமார் 878 பேர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Share This