விரைவில் அருண் – அர்ச்சனாவுக்கு டும் டும் டும்
சின்னத்திரை பிரபலங்களான அருண் பிரசாத் மற்றும் அர்ச்சனா இருவரும் காதலிப்பதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வந்தன.
இந்நிலையில் கடந்த சீசனில் பிக்பொஸ்ஸில் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் ஆனார் அர்ச்சனா.
பின்னர் இந்த வருட பிக்பொஸ்ஸில் போட்டியாளராக உள்ளே சென்றார் அருண். அப்போது குடும்பத்தினர் வந்து பார்க்கும் போது அர்ச்சனாவும் வந்திருந்தார்.
அப்போது அனைவர் முன்னிலையிலும் இவர் தான் என் காதலி என்று அருண் அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில் எவிக்ட் ஆகி வெளியில் சென்ற அருண் சில தினங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் எங்கள் திருமணத்தை விரைவில் நடத்த பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. இந்த ஆண்டுக்குள் திருமணத்தை முடிக்க திட்டமிட்டு வருகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.