‘நாளைய தீர்ப்பு’…இதுதான் தளபதி 69 இன் பெயரா?

‘நாளைய தீர்ப்பு’…இதுதான் தளபதி 69 இன் பெயரா?

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படத்துக்கு தற்காலிகமாக தளபதி 69 எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இத் திரைப்படத்துக்கு அனிருத் இசையமைப்பதோடு, பூஜா ஹெக்டே, பொபி தியோல் ஆகியோர் நடிக்கின்றனர்.

இத் திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அவ்வப்போது இப் படம் தொடர்பான தகவல்கள் மட்டும் வெளியாகும்.

இவ்வாறிருக்க வரும் 26 ஆம் திகதி குடியரசு தினத்தன்று இப் படத்தின் அப்டேட் அதாவது டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாக அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் தளபதி 69 இற்கு நாளைய தீர்ப்பு எனப் பெயரிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

1992 ஆம் ஆண்டு விஜய் நடித்த முதல் திரைப்படம் நாளைய தீர்ப்பு. எனவே இது விஜய் நடிக்கும் கடைசிப் படம் என்பதாலும் அவர் தேர்தலில் களமிறங்கியுள்ளதாலும் இப் படத்துக்கு இந்த தலைப்பு வைக்க அதிகம் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share This