‘அஸ்வெசும’ நலன்புரி திட்டம் – மறுபரிசீலனை செய்யப்படுவதாக அரசு தெரிவிப்பு
வறுமையான அனைவரை உள்ளடக்கும் வகையிலும் நியாயத்தை உறுதி செய்யும் வகையிலும் “அஸ்வெசும” நலன்புரி திட்டத்தின் விரிவான மதிப்பாய்வை அரசாங்கம் தொடங்கியுள்ளது என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும இன்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நிவாரணம் பெறாத தகுதியுள்ள நபர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு சலுகைகளை வழங்க மதிப்பாய்வுகள் நடந்து வருவதாகசும் அவர் கூறினார்.
சேகரிக்கப்பட்ட தகவல்கள் மீண்டும் ஆய்வு செய்யப்படுகின்றன. கணிசமான எண்ணிக்கையிலான மக்களிடமிருந்து முறையீடுகள் பெறப்பட்டுள்ளன. அவை முறையான நடைமுறைகளைப் பின்பற்றி முழுமையாக மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் பிரதி அமைச்சர் கூறினார்.