ஆயுளைக் கூட்டும் வாழை இலை…இதில் உணவு உண்ணுங்கள்
ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் வாழை இலையில் உணவு உண்ணுங்கள் என்று வெறுமனே நம் முன்னோர்கள் கூறிவிடவில்லை. வாழை இலையில் உணவு உண்பதால் பல நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன.
அந்த வகையில், வாழை இலையில் சாப்பிடத் தொடங்கும்பொழுது நமது உடல் பளபளப்படைந்து நச்சுக்கள் வெளியேறுகின்றன.
கொஞ்சமாக சாப்பிட்டாலும் வயிறு மிகவும் உப்புசமாக இருக்கிறது எனக் கூறுபவர்கள் வாழை இலையில் சாப்பிட்டால் செரிமானப் பிரச்சினை இருக்காது.
வாழை இலையில் உணவு உண்ணும் பொழுது இலையின் மணமே அதிகளவு பசியைத் தூண்டும்.
உடல் பலவீனமானவர்கள் வாழை இலையில் உணவு உண்ணும்பொழுது உடல் பலமடையும்.
வாழை இலையில் உணவு உண்பதால் இளநரை ஏற்படாமல் முடி கருப்பாக இருக்கும்.
சம்மணமிட்டு வாழையில் உணவு உண்ணும்பொழுது வயிற்றுப் பகுதிக்கு நல்ல பயிற்சி கிடைக்கிறது.
வாழை இலையில் உணவு உண்டால் உடல் குளிர்ச்சியடைவதோடு, பித்தம் சார்ந்த அனைத்து பிரச்சினைகளும் நீங்கும்.