ரியல் மீ, விவோ, அப்பிள் போன் தெரியும்….ஆனால் சம்பவ் போன் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
கையடக்கத் தொலைபேசிகளில் நோக்கியா, விவோ, செம்சங், ரியல் மீ, அப்பிள் பற்றித்தான் நமக்கு தெரியும்.
ஆனால், சம்பவ் போன் என்று ஒன்று இருப்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.
அதாவது இராணுவத்தில் பணியாற்றுபவர்கள் ஒரு சில விடயங்களை மிகவும் ரகசியமாக வைத்திருப்பார்கள்.
அதன்படி, இந்திய ராணுவ ரகசியங்கள் வெளியில் கசியாதபடி அவர்களுக்கு மட்டும் பயன்படும் வகையில் தனியாக சம்பவ் (Secure Army Mobile Bharat Version) என்ற ஒரு செல்போன் உள்ளது.
இந்த தொலைபேசியில் எம்.சிக்மா எனப்படும் செயலி மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்களை பகிர்ந்துகொள்ள முடியும்.