ப்ளாஸ்டிக் உண்ணும் புழு…ஆய்வில் வெளிவந்த உண்மை
உலகளாவிய ரீதியில் ப்ளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துவிட்டது.
இந்நிலையில் ஆபிரிக்க நாடான கென்யாவில் ப்ளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் புழுவை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
ப்ளாஸ்டிக்கை அழிப்பதற்கான முயற்சிகளில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்ற நிலையில், கென்யாவில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் Mealworm என அழைக்கப்படும் புழுக்கள் பொலிஸ்டிரீனை உண்பது தெரிய வந்துள்ளது.
இந்தப் புழுக்களின் குடலில் அதிகளவான புரோட்டியோ பக்டீரியா மற்றும் ஃபில்மிகியூட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்தப் பக்டீரியாக்கள் ப்ளாஸ்டிக்கை மக்கச் செய்யும்.
எனவே இந்த ஆய்வின் அடுத்தகட்டத்தை நோக்கி ஆராய்ச்சியாளர்கள் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.