செவ்வாய், வியாழன், வெள்ளி,சனி கிரகங்கள்…ஒரே நேர்கோட்டில்

செவ்வாய், வியாழன், வெள்ளி,சனி கிரகங்கள்…ஒரே நேர்கோட்டில்

வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய் ஆகிய நான்கு முக்கிய கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் தோன்றும் அரிய நிகழ்வு நடக்கவுள்ளது.

இன்று புதன்கிழமை மற்றும் நாளை இவை வானில் பிரகாசமாக தெரியவுள்ளது.

மேகங்கள் இல்லாத தெளிவான வானமாக இருக்கும்பட்சத்தில் இவை மிகவும் தெளிவாக தெரியும்.

இந் நேரம் செவ்வாய் கிரகம் பூமிக்கு மிகவும் அருகில் இருக்கும். இதற்கு முன் 2022 ஆம் ஆண்டு இது நிகழ்ந்தது.

அதன்படி ஜனவரி 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் வெள்ளி மற்றும் சனி ஆகிய கிரகங்கள் வானில் தோன்றும். இது கண்களுக்கு மிகவும் அருகில் இருப்பதைப் போல் தெரியும்.

 

Share This