ஹர்ஷன நாணயக்காரவின் கலாநிதி பட்டம் – நாடாளுமன்ற செயலகத்தின் அதரிகாரிகளிடம் வாக்குமூலம்

ஹர்ஷன நாணயக்காரவின் கலாநிதி பட்டம் – நாடாளுமன்ற செயலகத்தின் அதரிகாரிகளிடம் வாக்குமூலம்

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டத்தை குறிப்பிட்டு நாடாளுமன்ற இணையத்தளத்தில் பதிவிட்டமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக நாடாளுமன்ற செயலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் மற்றும் சில ஊழியர்கள் இன்று (15) குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னரும் குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக நாடாளுமன்றத்தின் தொலைத் தொடர்பு பிரிவின் தலைவர் உள்ளிட்ட சிலர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டதுடன் குற்றப்புலனாய்வுப் பிரிவிக் அதிகாரிகள் நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்து அங்குள்ள அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெற்றுக் கொண்டனர்.

நாடாளுமன்ற இணையத்தளத்தில் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி எனக் குறிப்பிட்டமை தொடர்பில் அண்மையில் அமைச்சர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This