தொடங்கொட பகுதியில் அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு

தொடங்கொட பகுதியில் அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு

தொடங்கொட, வில்பத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது இன்று (15) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டின் ஜன்னலில் நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் எனினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டதாகவும், சிறப்பு அதிரடிப் படை வீரர்களும் வரவழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தொடங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This