மதுபானம் மற்றும் சிகரெட் விலை அதிகரிப்பால் யாருக்கு லாபம்?

மதுபானம் மற்றும் சிகரெட் விலை அதிகரிப்பால் யாருக்கு லாபம்?

மதுபானம் மற்றும் சிகரெட்டுகள் சாதாரண நுகர்வோர் பொருட்கள் அல்ல எனவும் அவற்றின் விலைகள் எப்போதும் அந்தப் பொருட்களை வாங்குவதை ஊக்கப்படுத்தாத அளவில் பராமரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளது.

“இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15,000 பேர் மது அருந்துவதால் மரணமடைகிறார்கள். புகைப்பிடிப்பதனால் ஆண்டுக்கு சுமார் 20,000 பேர் உயிரிழக்கின்றனர்.

கூடுதலாக, ஏராளமான மக்கள் நோய்வாய்ப்படுகிறார்கள், மேலும் மது மற்றும் புகைப்பழக்கம் மக்களின் மகிழ்ச்சியையும் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தும் முக்கிய காரணிகளாக மாறிவிட்டன.

இந்நிலையில், நாட்டில் உள்ள பல்வேறு தரப்பினர்களையும் ஈர்க்கும் நோக்கில் புகைப்பொருட்கள் மற்றும் மதுபான நிறுவனங்கள் பல்வேறு உத்திகளைச் செயல்படுத்துகின்றன.

நாட்டில் தொற்றா நோய்களால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை தற்போது 80 வீதமாக அதிகரித்துள்ளது. தொற்றாத நோய்களுக்கான நான்கு முக்கிய ஆபத்து காரணிகளில் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆகும்.

அமெரிக்க மத்திய அரசின் பொது சுகாதார சேவைகளின் தலைவர் (சர்ஜன் ஜெனரல்) இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

அதில் மது ஒரு புற்றுநோயை உண்டாக்கும் காரணி என்றும், சிறிய அளவிலான மது அருந்துதல் கூட ஒரு நபரின் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது என்றும் கூறினார்.

அற்ககோல் ஒரு புற்றுநோயை உண்டாக்கும் காரணியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வரி அதிகரிப்பால் சிகரெட் உற்பத்தி துறை பெறும் கூடுதல் லாபம் தோராயமாக 7,000 மில்லியன் ரூபாய்க்கு மேல் என்று மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் வெளிப்படுத்தியுள்ளது.

மக்கள் சார்பு அரசாங்கங்கள் செய்ய வேண்டியது புகையிலை மற்றும் மதுபான நிறுவனங்களின் வருவாயை அதிகரிப்பது அல்ல.

மாறாக பொதுமக்களை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் ஆரோக்கியமான, பொருளாதார முடிவுகளை எடுப்பதுதான் என்பதை மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், முறையான கலால் கொள்கையை அமல்படுத்துவதன் மூலம் மக்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This