புளியின் விலை சடுதியாக அதிகரிப்பு!

புளியின் விலை சடுதியாக அதிகரிப்பு!

நாட்டில் புளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் சந்தையில் அதன் விலை வேகமாக அதிகரித்துள்ளது.

புளிக்கான அதிகபட்ச சில்லறை விலையானது 350  ரூபாய் தொடக்கம் 400  ரூபாய் வரையில் காணப்படும்

எனினும்,  இன்று (12) ஹட்டன் பகுதியில் ஒரு கிலோ புளியின் சில்லறை விலை 2,000 ரூபாவாக காணப்பட்டது.

இந்த நாட்களில் புளிக்கான அறுவடை இல்லை என்றும், மார்ச் மாத இறுதியில் புளிக்கான அறுவடை முடியும் வரை இந்தப் பற்றாக்குறை தொடரும் என்றும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், தைப்பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ளதால் இந்துக்கள் உணவுக்காக அதிகளவில் புளியை கொள்வனவு செய்து வருவதன் காரணமாகவும் இவ்வாறு விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Share This