மலையகத்திற்கான ரயில் சேவை பாதிப்பு
சீரற்ற காலநிலை காரணமாக மலையகத்திற்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஓஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன இடையேயான ரயில் பாதையில் இன்று (12) காலை மண்சரிவு ஏற்பட்டதால், பதுளை – கொழும்பு கோட்டை ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ரயில் பாதையில் பாறைகள் மற்றும் மண் சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த 1045ஆம் இலக்க இரவு அஞ்சல் ரயில் தற்போது பட்டிபொல ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பதுளைக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையிலான மலையக ரயில் பாதையில் ரயில் சேவைகள் சற்று தாமதமாகும் என்றும் கூறப்படுகிறது.