மதுபானம் – சிகரெட் விலைகள் அதிகரிப்பு
அனைத்து வகையான மதுபானங்களுக்கான கலால் வரியை 6வீதமாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வரி அதிகரிப்பு நேற்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, அல்ட்ரா ஸ்பெஷல் போத்தல் ஒன்றின் விலை 106 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இலங்கை சீனி நிறுவனம் உற்பத்தி செய்யும் எத்தனோலில் இருந்து மலிவான மதுபானத்தை அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹதுன்நெத்தி அண்மையில் யோசனை ஒன்றை தெரிவித்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும், சிகரெட்டின் விலை நாளை முற்பகல் 11 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டவுள்ளது.
இதன்படி 4 வகைகளின் கீழ் சிகரெட் ஒன்றின் விலை 5 ரூபா மற்றும் 10 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
CAPSTAN மற்றும் John Player சிகரெட்டுகள் 5 ரூபாவினாலும், dunhill மற்றும் 83 mm Gold Leaf சிகரெட்டுகள் 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.