பூட்டப்பட்ட வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஐந்து உடல்கள்
உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் மாவட்டம் லிசாடி கேட் பொலிஸ் நிலையப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மொயின் என்பவர் அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் குறித்த வீட்டில் வசித்து வந்துள்ளார்.
மெக்கானிக்காக பணியாற்றி வந்த மொயினை சில நாட்களாக காணாததால் அவரது சகோதரர் நேற்று வியாழக்கிழமை மொயினின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அங்கு மொயினின் வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில் கதவைத் திறந்தும் திறக்காததால் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கதவு வெளிப் பக்கமாக பூட்டியிருந்ததால் பொலிஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஐந்த பேரின் உடல்களை கண்டெடுத்துள்ளனர்.
அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு பொலிஜார் அனுப்பி வைத்தனர்.
அதில் இறந்தவரின் ஒருவரின் கால்கள் படுக்கை விரிப்பால் கட்டப்பட்டிருந்தமையும் தெரிய வந்துள்ளது.