இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150 ஆவது ஆண்டு தினம்…அண்டை நாடுகளுக்கு அழைப்பு

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150 ஆவது ஆண்டு தினம்…அண்டை நாடுகளுக்கு அழைப்பு

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு ‘ஒருங்கிணைந்த இந்தியா’ எனும் தலைப்பின் கீழ் எதிர்வரும் 15 ஆம் திகதி கருத்தரங்கொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கருத்தரங்குக்கு வரும்படி, இலங்கை, பூட்டான், பாகிஸ்தான், மியன்மார், ஆப்கானிஸ்தான், மாலைத்தீவு, நேபாளம் ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வானிலைதுறை அதிகாரி கூறுகையில், “இந்த கருத்தரங்கில் அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ள வேண்டும் டின விரும்புகிறோம்” எனக் கூறியுள்ளார்.

இந்த 150 ஆவது ஆண்டு சிறப்பு தினத்தை முன்னிட்டு நிதியமைச்சகத்தின் சார்பாக 150 சிறப்பு நாணயங்கள் வெளியிடப்படுவதோடு, குடியரசு தின அலங்கார ஊர்தி பேரணியில் வானிலை ஆய்வு மையம் குறித்த ஊர்தியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This