ரஷ்ய நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணியொருவர் நீரில் மூழ்கி பலி உயிரிழப்பு
மட்டக்களப்பு – பாசிக்குடா கடலில் தனது மனைவியுடன் நீராடிய ரஷ்ய நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணியொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
63 வயதான இவர் இன்று (10) அதிகாலை தனது மனைவியுடன் நீராடிக் கொண்டிருந்த வேளை இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
தன்னுடன் நீராடிக்கொண்டிருந்த கணவன் நீரில் காணாமல் போன நிலையில் மனைவி அவலக் குரல் எழுப்பியதை தொடர்ந்து கடற்படை, பொலிஸ் உயிர்பாதுகாப்பு சுழியோடிகள் மற்றும் பலரும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
குறித்த சுற்றுலா பயணி மீட்கப்பட்டு முதலுதவி வழங்கப்பட்டு வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தமை மருத்தவ சோதனையில் தெரிய வந்ததாக பொலிஸ் தரப்பு தகவல்கள் கூறுகின்றன.
தமது 3 பெண் பிள்ளைகளும் தந்தை இழந்த நிலையில் ஆழ்ந்த துயரத்தில் உள்ளனர். கல்குடா பொலிஸாரால் விசாரணை தொடர்கின்றது. சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.