அரச ஊடகங்கள் சீன ஊடகக் குழுமத்துடன் ஒப்பந்தம்
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் லேக் ஹவுஸ் ஆகியவை சீன ஊடகக் குழுமத்துடன் ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அதன்படி, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு மற்றும் சீனா மக்கள் குடியரசு நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குறித்த தீர்மானத்தில், இரு நாடுகளுக்கிடையில் காணப்படுகின்ற ஒத்துழைப்புகளை பலப்படுத்தும் நோக்கில் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு மற்றும் சீனா மக்கள் குடியரசின் கீழ்காணும் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ளப்படவுள்ளது.
அவை பின்வருமாறு,
சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு மற்றும் சீனா மக்கள் குடியரசின் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
வரையறுக்கப்பட்ட ஐக்கிய பத்திரிகைக் கம்பனி மற்றும் சீனாவின் சிங்குவா பத்திரிகை முகவர் நிறுவனத்திற்கும் (Xinhua News Agency) இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் சீனாவின் சிங்குவா பத்திரிகை முகவர் நிறுவனத்திற்கும் (Xinhua News Agency) இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் சீனா ஊடகக் குழுமம் (China Media Group) இதற்கிடையிலான ஒப்பந்தம்
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் மற்றும் சீனா ஊடகக் குழுமம் (China Media Group) இதற்கிடையிலான ஒப்பந்தம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளது.