ஜனாதிபதி சீனாவுக்கு மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 14ஆம் திகதி சீனாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று செவ்வாய்க்கிழமை இதனைத் தெரிவித்தார்.
எதிர்வரும் 17 ஆம் திகதி வரை அவர் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் விஜித ஹேரத் ஆகியோரும் இந்த பயணத்தில் இணைந்துக் கொள்வார்கள் என
அவர் மேலும் தெரிவித்தார்.