யாசகர்கள் குறித்து தகவல் தந்தால் 1000 ரூபாய் வெகுமதி – இந்தூரில் நடவடிக்கை

யாசகர்கள் குறித்து தகவல் தந்தால் 1000 ரூபாய் வெகுமதி – இந்தூரில் நடவடிக்கை

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரை யாசகர்கள் இல்லாத நகரமாக மாற்றுவதற்கு அம் மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, குறித்த மாநிலத்தில் சுற்றித் திரியும் யாசகர்கள் பற்றி தகவல் தந்தால் ரூபாய் 1000 வெகுமதியாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இம் மாதம் 2 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விதிகளின் அடிப்படையில், நகரில் யாசகம் கேட்பது மற்றும் வழங்குவது என்பது சட்டப்படி குற்றம்.

இவ் விதியை மீறும் பட்சத்தில் இந்திய நீதிச் சட்டம் 223இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த நான்கு நாட்களில் இது தொடர்பில் சுமார் 200 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன.

அதன் உண்மைத் தன்மையை கண்டறிந்து 12 பேருக்கு தலா ரூபாய் 1000 வெகுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு மாதங்களில் மட்டும் குறித்த நகரில் யாசகம் பெற்ற 400 பேர் மறுவாழ்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதோடு 64 குழந்தைகள் குழந்தை பராமரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இந் நடவடிக்கைகளின் கீழ் யாசகர்கள் இல்லாத 10 நகரங்களில் இந்தூரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This