சீனாவில் பரவி வரும் வைரஸ் – இலங்கை சுகாதார அமைச்சின் விசேட அறிவிப்பு

சீனாவில் பரவி வரும் வைரஸ் – இலங்கை சுகாதார அமைச்சின் விசேட அறிவிப்பு

சீனாவில் பரவி வருவதாக கூறப்படும் வைரஸ் தொடர்பான நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதை உறுதிப்படுத்திய தொற்றுநோய் பிரிவு மேலும் முழுமையான ஆய்வு மற்றும் நிலைமையை பகுப்பாய்வு செய்த பின்னர் பொதுமக்களுக்கு உரிய தகவல்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் மீண்டும் ஒரு புது வைரஸ் பரவி பலர் பாதிக்கப்பட்டு வருவது தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் உள்ள பல வைத்தியசாலைகள் இன்ஃப்ளூயன்ஸா ஏ, மைக்கோபிளாஸ்மா நிமோனியா மற்றும் கோவிட் -19 நோயாளர்களால் நிரம்பி வழிவதாகவும் காணொளி பதிவுகள் தெரிவிக்கின்றன.

கோவிட் -19 தொற்றுநோய் ஏற்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) தொற்று நோயால் சீனர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதாக கூறப்பட்டாலும் உத்தியோகப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகவில்லை.

Share This