கடந்த ஆண்டில் 268 பேரின் உறுப்பு தானத்தால் 1500 பேருக்கு மறுவாழ்வு
2024 ஆம் ஆண்டில் மூளைச்சாவு அடைந்த 268 பேரிடமிருந்து தானமாக பெறப்பட்ட உடல் உறுப்புகளை பொருத்தியதில் சுமார் 1500 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டில் சுமார் 178 பேர் உறுப்பு தானம் செய்துள்ளனர். அதன் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சுமார் 1000 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
மூளைச்சாவு அடையும் ஒருவரின் உடல் உறுப்புகள் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் உரிய மருத்துவ அறிவியல் முறையில் உறுதி செய்யப்பட வேண்டும்.
அதனைத் தொடர்ந்தே உறுப்புக்களை பொருத்த வேண்டும்.
இந் நடைமுறையில் மருத்துவம், சட்டம், உளவியல் ஆகிய ரீதியில் பல சிக்கல்கள் இருந்தாலுமே பலரின் மறுவாழ்வுக்கு இது வழிவகை செய்துள்ளது.