
தங்கத்தின் விலை வீழ்ச்சி – இன்றைய நிலவரம்
இலங்கையிலும் தங்கத்தின் விலை இன்று(20) வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்றைய தங்க விலை நிலவரப்படி,24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 368,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி, இலங்கையிலும் தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்தியுள்ளது.
இதன்படி, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,787 டொலராகக் காணப்படுவதுடன் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 79 டொலராக விற்பனை செய்யப்படுகின்றது.
