
போலிச் செய்தி!! நாமல் எம்.பி மன்னர் சார்லஸை சந்திக்கவில்லை
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, பிரித்தானிய மன்னர் சார்லஸை சந்திக்கவில்லை என்று நாமல் ராஜபக்சவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாமல் ராஜபக்சவின் ஊடகப் பிரிவான நாமல் ராஜபக்ச மீடியா இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
“நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீது அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கத்துடன்” திருத்தப்பட்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் குறித்த புகைப்படம், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மீது அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில் பதிவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, பிரித்தானிய மன்னர் சார்லஸை சந்திக்கவில்லை என்று நாமல் ராஜபக்சவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
TAGS Namal Rajapaksa
