மற்றுமொரு ஜெஜூ ஏர்லைன்ஸ் விமானத்தில் கோளாறு – அவசரமாக தரையிறக்கம்

மற்றுமொரு ஜெஜூ ஏர்லைன்ஸ் விமானத்தில் கோளாறு – அவசரமாக தரையிறக்கம்

தென்கொரியாவில் உள்ள ஜிம்போ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஜெஜூ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் தரையிறங்கும் கருவியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் இருந்த 161 பயணிகளும், பணியாளர்களும் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும், அவர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று, தென் கொரியாவில் உள்ள முவான் விமான நிலையத்தில், ஜெஜூ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதில் 179 பேர் உயிரிழந்தனர்.

ஜெஜூ ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737-800 ரக விமானம் விபத்துக்குள்ளாகி 24 மணி நேரத்திற்கு முன்னரே ஜிம்போ சர்வதேச விமான நிலையத்தில் பதிவான சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This