ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸிற்கு சட்டவிரோத சரக்குகள்தான் காரணமா?

ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் வைரஸிற்கு சட்டவிரோத சரக்குகள்தான் காரணமா?

ஆபிரிக்க பன்றிக் காய்ச்சலைத் தொடர்ந்து, பன்றி இறைச்சித் தொழிலில் ஏற்படும் சேதங்களுக்கு அதிகமாக இலங்கையின் காட்டுப்பன்றி இனத்தின் அழிவு சாத்தியம் பற்றிய பயத்தை தூண்டுகிறது.

2023 ஆம் ஆண்டுக்கு முந்தைய அரசாங்கத்தின் காலத்தில் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட சட்டவிரோத சரக்குகள் மூலம் வைரஸ் நாட்டுக்குள் நுழைந்ததாக சந்தேகிக்கப்படுவதால் இலங்கையின் உயிரியல் பாதுகாப்பு கண்காணிப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

புதிய தொழில் ஆரம்பிப்பதற்கு நாடு வைரஸிலிருந்து விடுபட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய பன்றி இறைச்சி மற்றும் அதில் செய்யப்படும் பொருட்களை விநியோகிக்க அதிகாரிகள் சிந்திக்கிறார்கள்.

பன்றிக் காய்ச்சல் ஏற்கனவே பன்றிகளைக் கொன்று வனப் பகுதிக்குள் நுழைந்துவிட்டால் காட்டுப் பன்றிகள் மொத்தமும் அழிந்துவிடும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

தற்சமயம் வனவிலங்கு சுகாதார அதிகாரிகள் காடுகளில் பாதுகாக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பற்ற பகுதிகளில் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

ஆரம்பக் கட்டத்தில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வந்த கப்பல் மற்றும் விமானங்களில் வந்து சேர்ந்த உணவுக் கழிவுகளால் இந்த வைரஸ் வந்திருக்கும் என விவசாயம், கால்நடைகள் அமைப்பு நீர்ப்பாசன அமைச்சகத்துக்கு அறிக்கை அளித்திருந்தது.

எவ்வாறாயினும் சட்டவிரோதமான பன்றி இறைச்சி பொருட்களிலிருந்து நாட்டுக்கு வைரஸ் பரவியதா? என்று இப்போது சந்தேகிக்கப்படுகிறது.

இந்த சந்தேகத்தின் உண்மைத் தன்மையை கண்டறிவதற்காக வல்லுநர் குழுவை விரைவில் நியமிக்கவுள்ளதாக இது தொடர்பிலான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“முன்பு விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையால் உணவு கழிவுகளுடன் வைரஸ் வந்திருக்கும் என எங்களிடம் கூறப்பட்டது. இது சட்டவிரோத சரக்குகளிலிருந்து வந்ததா எனும் சந்தேகம் தற்போது வலுத்து வருகிறது. அதை ஆராய உள்ளோம்.

முதற்கட்ட அறிக்கையின்படி, இறுதியாக கால்நடை தீவனமாகப் பயன்படுத்தப்பட்ட உணவுக் கழிவுகளிலிருந்து இந்த வைரஸ் வந்தது.

எனவே, தற்போது பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் தடைப்பட்டிருப்பதால் உண்மையை நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

பன்றி இறைச்சித் தொழில் மீள எவ்வாறு புத்துயிர் பெறும் என அவரிடம் கேட்டபோது, முதலில் நாட்டில் தற்போது வைரஸ் இல்லையென்பதை உறுதிப்படுத்த வேண்டும். பின்பே பன்றி இறைச்சி தயாரிப்புகளை விநியோகிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

மேலும் தொழில் துறைப் பற்றிக் கேட்டபோது, இதுவொரு துறையாக சரியாக ஒழுங்குப்படுத்தப்படவில்லை என்றும் பன்றி இறப்புகள் கூட ஆரம்பத்தில் அதிகாரிகளிடமிருந்து மறைக்கப்பட்டன. இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தபோது அதை அவர்களால் மறைக்க முடியவில்ல என்றும் அவர் கூறினார். இவ்வாறு டெய்லி மிரர் ஆங்கிலப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Share This