ஜேர்மன் அரசியல்வாதிக்கு இலங்கையில் ஓரின துணை – எலான் மஸ்கின் கருத்தால் பரபரப்பு
எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் பிரபல ஜேர்மனி அரசியல்வாதிக்கு இலங்கையில் ஓரினச் சேர்கையாளர் இருப்பதாக உலகின் முதல்நிலை செல்வந்தரான எலான் மஸ்க் தெரிவித்துள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், ஜேர்மனியின் தீவிர வலதுசாரி கட்சியை ஆதரித்த பின்னர் மஸ்கின் கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மன் ஜனாதிபதியாக இருந்த ஓலாப் ஸ்கோல்ஸ் தலைமையிலான அரசாங்கம் அண்மையில் கவிழந்தது.
கடந்த 2021ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் ஓலாப் ஸ்கோல்ஸ் கூட்டணி அமைத்து ஆட்சி செய்தார். இந்நிலையில், அவர் கொண்டுவந்த பொருளாதார சட்டங்களுக்கு கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
மேலும், அவருக்கு வழங்கிய ஆதரவையும் மீளப் பெற்றன. இதனால் நாடாளுமன்றத்தில் அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ் அரசாங்கம் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தமையால் ஓலாப் ஸ்கோல்ஸ் தலைமையிலான அரசு கவிழ்ந்தது.
ஜேர்மன் அரசியலமைப்பு சட்டப்படி நாடாளுமன்றத்தை கலைக்க உத்தரவிடப்பட்ட பின்னர் பெப்ரவரி 23ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜேர்மனி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், ஜேர்மனிக்கான மாற்று அல்லது AfD கட்சியை ஆதரிப்பதாக எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
“ஜேர்மனிக்கான மாற்று (AfD) இந்த நாட்டிற்கான நம்பிக்கையின் கடைசி தீப்பொறி” என்று மஸ்க் தெரிவித்துள்ளார்.
தீவிர வலதுசாரி கட்சி “பொருளாதார செழிப்பு, கலாச்சார ஒருமைப்பாடு மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் யதார்த்தமும் கொண்ட ஒரு எதிர்காலத்திற்கு நாட்டை இட்டுச் செல்ல முடியும்” என்று அவர் மேலும் கூறினார்.
ஜேர்மனியில் தான் செய்துள்ள முதலீடு நாட்டின் நிலை குறித்து கருத்து தெரிவிக்கும் உரிமையை தனக்கு வழங்கியதாகவும் எலான் மஸ்க் சுட்டிக்காட்டியுள்ளார்.
“AfDஐ வலதுசாரி தீவிரவாதியாக சித்தரிப்பது தெளிவாகத் தவறானது என்றும் கட்சியின் தலைவரான ஆலிஸ் வீடல் இலங்கையைச் சேர்ந்த ஒரு ஓரினச்சேர்க்கையாளரைக் கொண்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, அது உங்களுக்கு ஹிட்லரைப் போலத் தோன்றுகிறதா? என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
எவ்வாறாயினும், மஸ்கின் விமர்சனம் ஜேர்மன் ஊடகங்களில் பேச்சு சுதந்திரத்தின் எல்லைகள் குறித்து ஒரு விவாதத்திற்கு வழிவகுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.