
ரணில் நீதிமன்றில் முன்னிலையானார்
பொது சொத்துச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (28) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
இதன்படி, சற்று முன்னர் ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவரின் மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள லண்டன் செல்ல அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி, வாக்குமூலம் அளிக்க 2025 ஒகஸ்ட் 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வந்த முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
