
ஓமானில் படகு கவிழ்ந்ததில் மூன்று பிரான்ஸ் நாட்டவர்கள் பலி
ஓமானின் தலைநகரான மஸ்கட்டில், கடலில் படகு கவிழ்ந்ததில் குறைந்தது மூன்று பிரான்ஸ் நாட்டு சுற்றுலாப் பயணிகள் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஓமன் வளைகுடாவில் படகு கவிழ்ந்தபோது 25 பிரான்ஸ் சுற்றுலாப் பயணிகள், ஒரு சுற்றுலா வழிகாட்டி மற்றும் ஒரு படகு கேப்டன் ஆகியோர் பயணம் செய்ததாக ரோயல் ஓமன் காவல்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
மூன்று சுற்றுலாப் பயணிகள் இறந்ததாகவும், இருவர் லேசான காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“சம்பவத்தின் சூழ்நிலைகளைக் கண்டறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
ஓமன் வளைகுடாவில் உள்ள சுல்தான் கபூஸ் துறைமுகத்திலிருந்து 2.5 கடல் மைல் தொலைவில் படகு கவிழ்ந்தபோது, உயிரிழந்தவர்களைத் தவிர, இரண்டு சுற்றுலாப் பயணிகள் லேசான காயங்களுக்கு ஆளானார்கள்.
இந்த சம்பவம் குறித்து பிரான்சின் வெளியுறவு அமைச்சகம் கருத்து எதனையும் வெளியிடவில்லை.
