
கொழும்பின் பிரபல பாடசாலை தொடர்பில் வைரலாகியுள்ள காணொளி – கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு
கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியைகளுக்கும், குறித்தப் பாடசாலையின் தலைமை மாணவருக்கும் இடையிலான நெருக்கமான உறவு மற்றும் அது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவுவது குறித்து கல்வி அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அந்தப் பாடசாலையின் அதிபருக்கு கல்வி அமைச்சின் செயலாளர் நலக கலுவெவ (Nalaka Kaluwewa) உத்தரவிட்டுள்ளார்.
இந்த அறிக்கை கிடைக்கும் வரை சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு எதிராக எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், விசாரணை அறிக்கையின் அடிப்படையில் முறையான சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு உறுதியளித்துள்ளது.
CATEGORIES இலங்கை
