
நுவரெலியாவில் ஆகக்குறைந்த வெப்பநிலை பதிவு
நுவரெலியாவில் இன்று (22) மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வளிமண்லவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
3.5 பாகை செல்சியஸ் வெப்பநிலை இவ்வாறு பதிவாகியுள்ளதாக வளிமண்லவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, பண்டாரவளையில் 11.5 பாகை செல்சியஸ், பதுளையில் 15.1 மற்றும் கட்டுகஸ்தோட்டையில் 15.9 என வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை முல்லைத்தீவில் 25.3 பாகை செல்சியஸ் ஆகவும்,ஹம்பாந்தோட்டையில் 22 பாகை செல்சியஸ் ஆகவும், கொழும்பில் 22.1 பாகை செல்சியஸ் ஆகவும் பதிவாகியுள்ளதாகவும் வளிமண்லவியல் திணைக்களம் கூறியுள்ளது.
CATEGORIES Uncategorized
