
சதம் அடித்து புதிய சாதனை படைத்தார் விராட் கோலி
இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி தனது 54வது ஒருநாள் சதத்தை பதிவு செய்துள்ளார்.
இந்தூரில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
91 பந்துகளில் எட்டு நான்கு ஓட்டங்கள் மற்றும் இரண்டு ஆறு ஓட்டங்களுடன் தனது சதத்தை எட்டினார்.
இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் நியூசிலாந்துக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த துடுப்பாட்ட வீரர் என்ற சாதனையை விராட் படைத்துள்ளார்.
அவுஸ்திரேலியா அணியின் ஜாம்பவான் துடுப்பாட்ட வீரரான ரிக்கி பாண்டிங்கிடம் இருந்த சாதனையை விராட் முறியத்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் நியூசிலாந்துக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான விராட்டின் ஏழாவது சதமாகும்.
ரிக்கி பாண்டிங் மற்றும் வீரேந்தர் சேவாக் ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிராக தலா ஆறு சதங்களை அடித்தனர், ஆனால் விராட் இப்போது அவர்கள் அனைவரையும் முறியடித்துள்ளார்.
விராட் கோலி – 7 சதங்கள்
ரிக்கி பாண்டிங் – 6 சதங்கள்
வீரேந்தர் சேவாக் – 6 சதங்கள்
சச்சின் டெண்டுல்கர் – 5 சதங்கள்
சனத் ஜெயசூர்யா – 5 சதங்கள்
விராட் கோலி ஐந்து நாடுகளுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட சதங்களை அடித்துள்ளார்.
இலங்கை, மேற்கிந்திய தீவுகள், அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளு்கு எதிராக ஏழு சதங்களை அடித்துள்ளார்.
எவ்வாறாயினும், இலங்கை அணிக்கு எதிரான 10 சதங்களை அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி இதுவரையில் சர்வதேச போட்டிகளில் 85 சதங்களை அடித்துள்ளார்.
அதிக சதங்கள் அடித்த வீரர்களில் சச்சின் டெண்டுல்கரை (100) முந்திச் செல்வதற்கு அவருக்கு 15 சதங்கள் தேவைப்படுகின்றது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான அவரின் இந்த சதம் இந்திய மண்ணில் கோலியின் 41வது சதமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
