
இந்தியாவின் பி.எஸ்.எல்.வி சி – 62 ரொக்கெட் திட்டம் தோல்வி
இந்தியாவால் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி சி – 62 ரொக்கெட் தனது இலக்கை அடையவில்லை என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-62 ரொக்கெட், இந்திய நேராப்படி 10.17 க்கு இன்று விண்ணில் ஏவப்பட்டது.
ரொக்கெட் ஏவப்பட்ட முதல் இரண்டு நிலைகள் வெற்றிகரமாக அமைந்தாலும், மூன்றாவது நிலை தொடங்கிய பிறகு, கட்டுப்பாட்டு மையத்துக்கு வரும் சமிஞ்சையில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..
“பிஎஸ்எல்வி-சி62 திட்டத்தின் 3 ஆவது நிலையின் முடிவில் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டதாக இஸ்ரோ வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து விரிவான ஆய்வு தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ரொக்கெட் இறுதி நேரத்தில் தனது பாதையிலிருந்து விலகிச் சென்றதால், அதில் இருந்த 16 செயற்கைக்கோள்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
