இந்​தி​யா​வும் ஐரோப்​பா​வும் இணைந்தால் சர்​வ​தேச அரசியலில் மாற்​றத்தை ஏற்​படுத்​த முடியும்

இந்​தி​யா​வும் ஐரோப்​பா​வும் இணைந்தால் சர்​வ​தேச அரசியலில் மாற்​றத்தை ஏற்​படுத்​த முடியும்

இந்​தி​யா​வும் ஐரோப்​பா​வும் இணைந்தால் சர்வதேச அரசி​யல், பொருளா​தா​ரத்​தில் மிகப்​பெரிய மாற்றத்தை ஏற்​படுத்​த முடியும் என்று மத்​திய வெளி​யுறவு அமைச்​சர் ஜெய்​சங்​கர் தெரி​வித்​துள்​ளார்.

பிரான்​ஸ், ஜெர்​மனி, போலந்து ஆகிய நாடு​கள் இணைந்து கடந்த 1991-ம் ஆண்டு `வெய்​மர் டிரைஆங்​கிள்’ என்ற கூட்டமைப்பை உரு​வாக்​கின. ஐரோப்​பிய நாடு​களின் பாது​காப்​பு, பொருளா​தா​ரத்தை மேம்​படுத்த இந்த கூட்​டமைப்பு பல்​வேறு நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறது.

`வெய்​மர் டிரைஆங்​கிள்’ கூட்​டமைப்​பின் வெளி​யுறவு அமைச்​சர்​கள் மாநாடு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இதில் சிறப்பு அழைப்​பாள​ராக இந்​திய வெளி​யுறவு அமைச்​சர் ஜெய்​சங்​கர் பங்​கேற்​றார். ஐரோப்​பிய நாடு​கள் அல்​லாத ஒரு நாட்​டின் பிர​தி​நிதி இந்த மாநாட்​டில் பங்​கேற்​பது இதுவே முதல்​முறை.

இந்த மாநாட்​டுக்கு பிறகு செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் ஜெய்​சங்​கர் கூறிய​தாவது: இந்​தி​யா​வுக்​கும் ஐரோப்​பாவுக்​கும் இடையி​லான உறவு வலு​வடைந்து வரு​கிறது. ஐரோப்​பாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தத்தை மேற்​கொள்​வது தொடர்​பாக கடந்த சில வாரங்​களாக விரி​வான பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது.

மேலும் தொழில்​நுட்​பம், செமி கண்​டக்​டர், ரயில்​வே, பாதுகாப்​பு, விமான போக்​கு​வரத்து ஆகிய துறை​களில் இருதரப்​பும் இணைந்து பணி​யாற்​று​வது குறித்து தீவிர ஆலோ​சனை நடத்​தப்​படு​கிறது.

சர்​வ​தேச அரசி​யல், பொருளா​தா​ரத்​தில் ஐரோப்பா மிக முக்​கிய பங்கு வகிக்​கிறது. இந்​தி​யா​வும் ஐரோப்​பா​வும் இணைந்தால் சர்​வ​தேச அரசி​யல், பொருளா​தா​ரத்​தில் மிகப்​பெரிய மாற்​றத்தை ஏற்​படுத்​த முடியும்.

ஜெர்​மனி பிரதமர் பிரெட்​ரிக் மெர்​ஸ், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்​ரான் ஆகியோர் விரை​வில் இந்​தி​யா​வுக்கு வருகை தர உள்​ளனர். அடுத்​தடுத்து பல்​வேறு ஐரோப்​பிய தலை​வர்​களும் இந்​தி​யா​வில் பயணம் மேற்​கொள்ள உள்​ளனர். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

உக்​ரைன் போர் காரண​மாக ஐரோப்​பிய நாடு​களுக்​கும் ரஷ்​யா​வுக்​கும் இடையி​லான உறவில் மிகப்​பெரிய விரிசல் ஏற்​பட்​டிருக்​கிறது. மேலும் கிரீன்​லாந்து விவ​காரத்​தில் அமெரிக்கா​வுக்கு எதி​ராக ஐரோப்​பிய நாடு​கள் பகிரங்​க​மாக போர்க்​கொடி உயர்த்தி உள்​ளன. தென்​சீனக் கடல், தைவான் விவ​காரங்​களில் ஐரோப்​பிய நாடு​கள் ஒன்​றிணைந்து சீனாவை கடுமை​யாக எதிர்த்து வரு​கின்​றன.

குடியரசு தின விழாவில்.. இந்த சூழலில் இந்​தி​யா, ஐரோப்​பிய நாடு​கள் இடையி​லான உறவு மிக​வும் வலு​வடைந்து வரு​கிறது. இதன் ஒரு பகு​தி​யாக வரும் 26-ம் தேதி டெல்​லி​யில் நடை​பெற உள்ள குடியரசு தின விழா​வில் ஐரோப்​பிய ஒன்​றி​யத்​தின் தலை​வர் உர்​சுலா வோன் டெர் லியென், ஐரோப்​பிய கவுன்​சிலின் தலை​வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான அந்​தோணியோ கோஸ்டா ஆகியோர் சிறப்பு விருந்​தினர்​களாக பங்கேற்கின்​றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )