
Sri Lanka Expo 2026 சர்வதேச கண்காட்சி ஜூனில் ஆரம்பம்
இலங்கை ஏற்றுமதி சாத்தியக்கூறுகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில் “Sri Lanka Expo 2026” என்ற பெயரில் சர்வதேச
கண்காட்சியொன்றை மேம்படுத்தவுள்ளதாக இலங்கை முதலீட்டு அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
இந்த கண்காட்சிக்கான என்ற www.srilankaexpo.lk இணையத்தளத்தையும் மேம்படுத்தும் நடவடிக்கையும் இதன்போது இடம்பெறுவதுடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பங்காளர்கள் இதனூடாக பதிவுகளை மேற்கொள்வதற்கும் வசதிகள் காணப்படுகின்றன.
2026 ஜூன் மாதம் 18ம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இதனூடாக இலங்கையிலுள்ள முதலீட்டு வாய்ப்புகளை சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்வதற்கு முடியுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கண்காட்சி குறித்தான அறிமுகத்தை வழங்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் கொழும்பு City of Dreams இல் இடம்பெற்றது.
