கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான பொண்ணொருவர் பலி

கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான பொண்ணொருவர் பலி

இரத்தினபுரி, எஹெலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலத்கொஹுபிட்டிய பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பொண்ணொருவர் நேற்று வெள்ளிக்கிழமை (27.12) கொலை செய்யப்பட்டுள்ளதாக எஹெலியகொட பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்பத் தகராறு காரணமாக, அந்தப் பெண்ணின் உறவினர் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

புலத்கொஹுபிட்டிய , எஹெலியகொட பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடைய பெண் ஒருவரே இந்த தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மேலதிக விசாரணைகளை எஹெலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This