
இந்திய இராணுவத் தளபதி பாதுகாப்புப் பிரதியமைச்சருடன் சந்திப்பு
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர துவிவேதி மற்றும் இலங்கையின் பாதுகாப்புப் பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கொழும்பில் உள்ள பாதுகாப்புப் பிரதியமைச்சர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்திய இராணுவத் தளபதி தலைமையிலான தூதுக்குழுவினர் இலங்கை வந்துள்ள நிலையில், பாதுகாப்புப் பிரதியமைச்சரை சந்தித்துள்ளனர்.
இரு தரப்பினருக்கும் இடையில் சுமூகமான கலந்துரையாடல் இதன்போது இடம்பெற்றுள்ளது.
அயல் நாடுகளான இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் நீண்டகாலமாக நிலவும் வரலாற்று, கலாசார மற்றும் நாகரிக ரீதியிலான தொடர்புகளை வலுப்படுத்துவது உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருதரப்பினரும் இதன்போது ஆழமாக கலந்துரையாடியுள்ளனர்.

