இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்தார் ஷாருஜன் சண்முகநாதன்

இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்தார் ஷாருஜன் சண்முகநாதன்

முதல் தரப் போட்டிகளில் தனது இரண்டாவது சதத்தை ஷாருஜன் சண்முகநாதன் பதிவு செய்துள்ளார்.

குருநாகல் யூத் கிளப் அணிக்கு எதிரான போட்டியில் தமிழ் யூனியன் அணிக்காக 122 ஓட்டங்களை குவித்ததன் மூலம் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

தனது அணி ஒரு கட்டத்தில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 58 ஓட்டங்களை குவித்த நிலையில் தடுமாறிக்கொண்டிருந்தது.

இதனையடுத்து களமிறங்கிய அவர் அணியை சரிவில் இருந்து மீட்டார். 263 பந்துகளை எதிர்கொண்ட அவர் 122 ஓட்டங்களை குவித்திருந்தார்.

21 பவுண்டரிகளை விளாசிய ஷாருஜன், நான்காவது விக்கெட்டுக்கு மினோத் பானுகாவுடன் இணைந்து 285 ஓட்டங்களை குவித்திருந்தார்.

முன்னதாக, குருநாகல் அணி முதல் இன்னிங்ஸில் மொத்தமாக 404 ஓட்டங்களை குவித்திருந்தது.

இதனையடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தமிழ் யூனியன் அணி 167 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

தொடர்ந்து போலோ ஒன் முறையில் துடுப்பெடுத்தாடிய தமிழ் யூனியன் அணி இரண்டாம் இன்னிங்ஸில் 358 ஓட்டங்களை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டி விபரங்கள்….

குருநாகல் YCC: 404 & 72/5
தமிழ் ஒன்றியம் (NCC): 167 & 358/6d

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )