டி20 போட்டிகளில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை!

டி20 போட்டிகளில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை!

டி20 போட்டிகளில் வீரர் ஒருவர் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார்.

பூட்டான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சோனம் யேஷி, டி20 கிரிக்கெட் வரலாற்றில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார்.

மியான்மருக்கு எதிரான போட்டியில், யேஷி நான்கு ஓவர்கள் பந்து வீசி, ஏழு ஓட்டங்களை விட்டுக்கொடுத்து எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

எவ்வாறாயினும், இந்தப் போட்டியில், பூட்டான் அணி மியான்மர் அணியை வீழ்த்தி 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )