
டக்ளஸ் தேவாநந்தா வைத்தியசாலையில் அனுமதி
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் இன்று (30) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல் நிலை தொடர்பில் வைத்தியர்களின் பரிந்துரையின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவத்தினால் டக்ளஸ் தேவாநந்தாவின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதுஷிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு உரிய பதில் வழங்க தவறியமை தொடர்பில் அவர் கடந்த 26ஆம் திகதி கைது செய்யப்பட்டு தடுப்பு காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டிருந்தார்.
அவர் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் ஜனவரி 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
