
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து டக் பிரேஸ்வெல் ஓய்வு!!
நியூசிலாந்து அணியின் சகல துறை வீரர் டக் பிரேஸ்வெல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
எலும்பு காயம் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டக் பிரேஸ்வெல் 28 டெஸ்ட் போட்டிகள், 21 ஒருநாள் போட்டிகள் மற்றும் 20 இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடியுள்ளார்.
மேலும் அவர் 74 டெஸ்ட் விக்கெட்டுகளையும் 46 ஒருநாள் விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
CATEGORIES விளையாட்டு
