இலங்கை ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார் நே-யோ

இலங்கை ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார் நே-யோ

கொழும்பில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சியை இரத்து செய்ததற்காக, சர்வதேச R&B நட்சத்திரம் நே-யோ தனது இலங்கை ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

சமூக ஊடகப் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தனது இலங்கை ரசிகர்களுடன் “ராக்கிங் செய்ய ஆவலுடன் இருப்பதாக” கூறிய அவர், “எதிர்பாராத சூழ்நிலைகள்” காரணமாக இது நிகழாமல் போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்காக அவர் “மன்னிப்பு” கோரியதுடன், விரைவில் இலங்கைக்குத் திரும்புவார் என்று இரசிகர்களுக்கு உறுதியளித்துள்ளார்.

டிசம்பர் 28 ஆம் திகதி நே-யோவின் இசை நிகழ்ச்சி நடைபெறவிருந்த நிலையில், கடைசி நிமிடத்தில் இரத்து செய்யப்பட்டது, மேலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது மோசடி புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )