இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்து அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்து அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரியில் இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.

இந்நிலையில், இந்த தொடரில் பங்கேற்கும் அணியை நியூசிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதில் முக்கிய வீரர்கள் நீக்கப்பட்டுள்ளதுடன், பலர் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை.

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட ஜேடன் லெனாக்ஸ் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளார்.

ஒருநாள் அணியில் அவர் முதல் முறையாக இடம்பிடித்துள்ளார்.

அவருடன், கிறிஸ் கிளார்க், ஆதி அசோக், ஜோஷ் கிளார்க்சன், நிக் கெல்லி, சமீபத்தில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான மிட்செல் ரே ஆகியோரும் ஒருநாள் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர்.

டி20 போட்டிகளுக்கு மிட்செல் சாண்ட்னர் அணிக்கு தலைமை தாங்குவார்.

அதே நேரத்தில் ஒருநாள் போட்டிகளில் மைக்கேல் பிரேஸ்வெல் தலைவராக செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் இருந்து நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் நீக்கப்பட்டுள்ளார். அதேபோது ரச்சின் ரவீந்திராவுக்கும் அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

காயம் காரணமாக நாதன் ஸ்மித், பிளேர் டிக்னர் மற்றும் மார்க் சாப்மேன் ஆகியோரும் ஒருநாள் தொடருக்குத் தெரிவுசெய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )