
அரசாங்கத்தின் உறுப்பினர்கள் இப்போது கஞ்சா பயிரிடுகின்றனர் – நாமல் எம்.பி குற்றச்சாட்டு
தற்போதைய பொலிஸ்மா அதிபர் நாட்டின் பொலிஸ்மா அதிபராக இல்லை எனவும், மாறாக அவர் தேசிய மக்கள் சக்தியின் பொலிஸ்மா அதிபராக இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பொலிஸ் அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் சுதந்திரமாகச் செய்யத் தயங்குகிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது அமைப்பு அதிகளவில் மாறிவிட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ராஜபக்சக்கள் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டுகளை முன்வைத்த தற்போதைய அரசாங்கத்தின் உறுப்பினர்கள் இப்போது கஞ்சா பயிரிடுவதாகவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான கஞ்சா தோட்டத்தை சோதனை செய்த பொலிஸ் அதிகாரிகள் பல்வேறு வகையான துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
கஞ்சா தோட்டத்தை சோதனை செய்த அதிகாரிகளில் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், மற்றொரு அதிகாரி வீதியில் வைத்து தாக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலாவின் கார் விபத்தை முறையான விசாரணை நடத்தாமல் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி அடக்க முயற்சிக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து விசாரணையை நடத்திய பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
