லஞ்ச் சீட் பாவனைக்கு முற்றாக தடை

லஞ்ச் சீட் பாவனைக்கு முற்றாக தடை

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட உணவகங்கள் மற்றும் உணவுகளை கையாளும் நிலையங்களில் லஞ்ச் சீட் பாவனை முற்றாக தடை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையானது 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

உணவகங்கள் மற்றும் உணவுப் பொருட்களைக் கையாளும் நிலையங்களின் உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பருத்தித்துறை நகரசபை பொதுச்சுகாதார பரிசோதகர் ப.தினேஷ் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், வியாபார நிலையங்களின் வியாபார உரிமம் நகரசபையின் தவிசாளருக்கு உள்ள அதிகாரத்தின் கீழ் இடைநிறுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்ச் சீட் பாவனைக்கு மாற்றீடாக வாழை இலை, தாமரை இலை, தேக்கம் இலை போன்றவற்றையும் உணவு பொதியிடலின் போது ஈய பேப்பர் மற்றும் உணவு பொதியிடலுக்காக அனுமதிக்கப்பட்ட கொள்கலன்களை பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )