ஆயுதப்படையினரை அழைத்து ஜனாதிபதியின் அதி விசேட வர்த்தமானி வெளியீடு
நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படையின் அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.