அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு – மோட்டார் சைக்கிள் மீட்பு

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு – மோட்டார் சைக்கிள் மீட்பு

அம்பலாங்கொடையில் இன்று (22) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்ட துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குருந்துவத்த – அந்ததோல சாலையில் கைவிடப்பட்ட நிலையில் குறித்த மோட்டார் சைக்கிள் கண்டெடுக்கப்பட்டது.

அம்பலாங்கொடை நகரில்  தனியார் நிறுவனம் ஒன்றின் மேலாளர் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டார், இரண்டு சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்தக் கொலை போட்டி குற்றவியல் குழுக்களுக்கு இடையிலான மோதலில் ஏற்பட்டிருக்கலாம் என்று  பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சந்தேக நபர்களைக் கண்டுபிடித்து கைது செய்வதற்காக அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )