மாலைத்தீவு கடற்பரப்பில் வைத்து இரண்டு இலங்கை மீன்பிடி படகுகள் பறிமுதல்

மாலைத்தீவு கடற்பரப்பில் வைத்து இரண்டு இலங்கை மீன்பிடி படகுகள் பறிமுதல்

மாலைத்தீவு கேலா கடற்பரப்பில் வைத்து இரண்டு இலங்கை மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வெளிநாட்டு உளவுத்துறையின் அடிப்படையில் மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படை முன்னெடுத்த நடவடிக்கையில் இந்த படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மாலைத்தீவின் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்குள்சட்டவிரோதமாக நுழைந்ததற்காக இந்த படகுகள் கடலோர காவல்படையினரால் தடுத்து வைக்கப்பட்டன.

நேற்று காலை கேலாவிலிருந்து சுமார் 51 கடல் மைல் தொலைவில் இந்த படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடலோர காவல்படை மற்றும் விமானப்படையினர் இணைந்து நடத்திய கூட்டு கண்காணிப்பு நடவடிக்கையின் போது இந்த பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் பின்னர் மாலைத்தீவு காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் முன்னெக்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம், மாலைத்தீவு கடற்கரையில் இலங்கை மீன்பிடிப் படகு ஒன்று பறிமுதல் செய்யப்பட்டதுடன், அதில் இருந்து 350 கிலோகிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து இலங்கையர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க இலங்கை புலனாய்வுக் குழுவ ஒன்று மாலைத்தீவு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )