கிளென் மெக்ராத்தின் சாதனையை முறியத்தார் நாதன் லியோன்!!

கிளென் மெக்ராத்தின் சாதனையை முறியத்தார் நாதன் லியோன்!!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அவுஸ்திரேலியா அணி சார்பில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் நாதன் லியோன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இங்கிலாந்து அணியின், பென் டக்கெட்டின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூவல் நாதன் லியோன் டெஸ்ட் போட்டிகளில் கைப்பற்றிய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 564 ஆக உயர்ந்துள்ளது.

இதன் மூலம், முன்னாள் வீரர் கிளென் மெக்ராத்தின் 563 என்ற விக்கெட்டுகளை எண்ணிக்கையை கடந்து நாதன் லியோன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

குறிப்பிடத்தக்க வகையில், நாதன் லியோன் இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்திய போது, மெக்ராத் வர்ணனையாளராக செயற்பட்டிருந்தார்.

அவுஸ்திரேலியா அணி சார்பில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் முதலிடத்தில் உள்ளார்.

அவர் 145 டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நாதன் லியோன் தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார், அதே நேரத்தில் க்ளென் மெக்ராத் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

நாதன் லியோன் தனது 141வது டெஸ்ட் போட்டியில் 564 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )